யாழில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணத்தில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் யாழப்பாணம் - ஈவினை, கிழக்கு புன்னாலைகட்டுவன் பகுதியில் நேற்று (08.10.2023) இடம் பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்பவத்தில் உயிரிழந்தவர் அச்சுவேலி - தோப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதையுடைய கிட்டுனன் லோகநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக்கொண்டு இருந்தவேளை, இன்னொருவர் அதனை கழுவுவதற்காக நீரை பாய்ச்ச ஆரம்பித்துள்ளார்.
இதன்போது திடீரென நீருடன் மின்சாரமும் இணைந்து பாய்ச்சப்பட்டதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam