99 வயது பெண் உட்பட ஐவர் கோவிட் தொற்றால் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 5 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும், நீர்வேலியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 99 வயதுடைய பெண் ஒருவர் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அவரது சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார மருத்துவமனையின் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
