9 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு அணிக்கு அபார வெற்றி
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 17 ஆவது போட்டியில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இன்று (14) இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ் கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சி
போட்டியின் நாணய சுழற்சியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றதுடன், அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய யாழ் கிங்ஸ் அணி, முழு ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பதில் இன்னிங்ஸை விளையாட களம் இறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 9 ஓவர்கள் 5 பந்துகள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து அந்த இலக்கை அடைய முடிந்தது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் முஹம்மது வசீம் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஏஞ்சலோ பெரேரா 16 ரன்களில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்ததுடன் பந்துவீச்சில் யாழ் கிங்ஸ் அணி சார்பாக பிரமோத் மதுஷன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.






| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam