ஜப்னா கிங்ஸ் உரிமையாளர் கைது
இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜப்னா கிங்ஸ் கழகத்தின் உரிமையாளர் ஒருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப்பிரஜைகள் என்று கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..
இன்று தொடங்கவிருக்கும் நிலையில்
ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவரான மன்ஜோத் கல்ரா மற்றும் யுவராஜ் குஷ்வஹா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2026 இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் இன்று தொடங்கவிருக்கும் நிலையில் இந்தக் கைது சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இலங்கை பிரீமியர் லீக் - 2026 போட்டியின் முதல் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி கேலண்ட்ஸ் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan