ரகித ராஜபக்ச மற்றும் சரித உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தி(SJB) ஹொரன அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகியோரை ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) சமீபத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
குரல் பதிவுகள் கசிவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அண்மையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
'ஹரக் கட்டா' தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக இந்த இலஞ்சப் பணம் பெறப்பட்டதாக சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் முன்னதாக விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்