யாழ். காரைநகர் வீதியால் அசௌகரியம்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை (Video)
இலங்கையில் பல பகுதிகளில் வாழும் மக்களின் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வரும் இந்த வீதி பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் யாழ்பாபணம் - காரைநகர் பகுதியின் அமைந்துள்ள வீதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் விரையில் பழுதடைவதாகவும் அப்பகுதி சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும் சேதடைந்து காணப்படும் இந்த வீதியால், நோயாளர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கும், பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்குச் செல்பவர்களுக்கும் சரியான நேரத்தில் சமூகமளிக்காமல் போகும் நிலை ஏற்படுவதாக கூறியுள்ளனர்.
இதனைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வீதியை உடனடியாக புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
