யாழில் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்! - கூட்டமைப்பு எம்.பிக்களிடம் நேரில் கூறிய ரணில்
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் தனது கொள்கை விளக்கவுரை முடிந்த பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இதன்போது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் தனது யாழ்ப்பாணப் பயணத்தின்போது புத்திஜீவிகள் குழுவுடனும் சந்திப்பு
நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. ஊடகங்களிடம் இன்று
தெரிவித்தார்.





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
