யாழ். மாநகர சபையில் அநாகரிகமான சொற்பிரயோகம்: வெளியேற்றப்பட்ட மாநகர சபை உறுப்பினர் (video)
யாழ். மாநகர சபை அமர்வில் வைத்து அநாகரிகமான சொற்பிரியோகத்தை உபயோகித்த மாநகர சபை உறுப்பினரொருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையின் அமர்வு இன்று (16.02.2023) மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாநகர சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி ''வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுகின்றனர்'' என கூறியுள்ளார். இதனால் சபையில் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபை அமர்வு
அதாவது குறித்த உறுப்பினர், சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என உறுப்பினர்கள் முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நீங்கள் என்னை வெளியேற்ற வேண்டாம் நானே வெளியேறி செல்கின்றேன் என உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி தெரிவித்துவிட்டு வெளியேறியுள்ளார்.
வெளியேற்றப்பட்டார் சபை உறுப்பினர்
குறித்த உறுப்பினருடைய அநாகரிகமான சொற்பிரயோகம் பதிவு செய்யப்படும் எனவும், சபையினுடைய வேண்டுகோளுக்கு அமைவாக அவர் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார் என யாழ். மாநகர சபைமுதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உறுப்பினருக்கு இந்த மாதத்துக்கான கொடுப்பனவும் ரத்து
செய்யப்படுகிறது எனவும், இந்த ஒரு மாதத்தில் சபையினுடைய செயற்பாடுகளுக்கு அவர்
அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
