யாழ்.போதனா வைத்தியசாலை விடுதியில் திருட்டு
யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருட்டு
இச்சம்பவம் நேற்று மாலை 05.00 மணியளவில் விடுதிகளில் இடம்பெற்றதாக விடுதி காப்பாளர்களின் தலைமை அதிகாரி ஒருவர் யாழ். தலைமை பொலிஸாருக்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் தெரிவிக்கையில்,அங்கு தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன.
அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாடு

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 21 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து 21 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த தொலைபேசிகள் மருத்துவமனையில் திருடப்பட்டவை எனவும், மருத்துவமனைகளில்
இருந்து தொலைபேசிகளை தவறவிட்டவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு வந்து
தொலைபேசிகளை அடையாளம் காண முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri