யாழ். போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து..! நேரில் சென்று பார்வையிட்ட ஆளுநர்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள களஞ்சிய சாலை பகுதிக்குள் அண்மையில் மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிரூட்டப்பட்ட அறை(Cool Room ) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில் ஏற்ப்பட்ட மின் கசிவு தான் தீ விபத்துக்கு காரணம் என சந்தேகிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீ விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(09) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தீ விபத்து நடந்த இடத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலர் ம.பிரதீபன் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறுதிருமுருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, வைத்தியசாலை பணிப்பாளரிடம் நிலைமைகளைக் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
மேலும், பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்று நிலைமைகளை எடுத்துரைத்துள்ளார்.

இதன்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கும் இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கும் அவர்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியபகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தீ விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாநகர சபை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அணைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
தீ பரவலுக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.








ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam