யாழ். தாவடியில் போதைப்பொருள் வியாபாரி கைது
யாழ். தாவடி தெற்கு பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் மீட்பு
கைதான சந்தேக நபரிடமிருந்து 80 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் எனவும், வீட்டில் வைத்தும் வியாபார நடவடிக்கையை முன்னெடுத்தார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரிகளுடன் இவர் நீண்ட
காலமாக தொடர்பைப் பேணி வந்தார் எனவும் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
