யாழ். சிறைச்சாலையில் 34 பேருக்கு கோவிட் தொற்று
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புதிய கோவிட் கொத்தணி உருவாகியுள்ளது என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ். சிறைச்சாலையைச் சேர்ந்த 34 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
39 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 பேருக்கு மாத்திரமே தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் 22 வயதுடைய பெண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து கடந்த 16ஆம் திகதி பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு நாட்களுக்குள் ஏனையவர்களுக்கும் பரவல் ஏற்பட்டிருக்கும் அபாயம் காணப்படுகின்றது என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
