யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் சார்பாக இந்திய பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கையின் வடபகுதி கடற்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதீசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் இந்தியப் பிரதமரிடம் பகிரங்க கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இக் கோரிக்கையை கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ளனர்.
கோரிக்கைகள்
இதற்கமைய பிரதமர் மோடிக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் இன்றையதினம் கையளித்துள்ளனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிககையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கையினால் இலங்கையின் வடபகுதி கடற்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தொடர்ச்சிசியாக நாங்கள் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறோம்.
ஆனால் இலங்கை இந்திய அரசுகள் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்காத நிலைமையே காணப்படுகிறது.
அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள்
எனவே இலங்கைக்கு வருகின்ற இந்தியப் பிரதமர் இலங்கை இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சரியான தீர்வொன்றை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.
அதாவது எமது கடற்பரப்பிற்குள் எக்காரணம் கொண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி வரக்கூடாது. அதனையும் மீறி வந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அத்தோடு இந்திய கடற்றொழிலாளர்களால் பாதிக்கப்பட்டு வாழ்வாணாரத்தை இழத்துள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளோம்.
மேலும் தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பி முன்னரைப் போன்று போராட்டங்களை முன்னெடுப்போம்.''என தெரிவித்துள்ளார்.





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
