தனியார் வங்கி ஒன்றின் தரவு மீறல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு
இலங்கையில் உள்ள ஒரு முன்னணி தனியார் வங்கி சம்பந்தப்பட்ட தரவு மீறல் குறித்து இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல் என்று இதனை நிபுணர்கள் விபரித்துள்ள நிலையில், கடந்த அமைச்சரவை இந்த பிரச்சினையை எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் பாதுகாப்பு சபையால் அது கவனிக்கப்பட்டிருக்கலாம் என்று தாம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், தனியார் வங்கி ஓன்று, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு "சைபர் பாதுகாப்பு நிகழ்வு" குறித்து தெரிவித்திருந்தது.
சைபர் பாதுகாப்பு
அதில், முக்கியமான தனிப்பட்ட தரவுகளின் குறிப்பிடத்தக்க மீறலும் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சைபர் பாதுகாப்பு குறித்து, அதிகரித்து வரும் கவலையை ஜயதிஸ்ஸ ஒப்புக்கொண்டார். தற்போதைய சட்டம் அதற்கு போதுமானதாக இல்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
