யாழ். கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் ஆரம்பம்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தொடர் போராட்டங்கள்
இலங்கைக் கடல் எல்லையில் இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்கள் கடந்த மாதம் 26ஆம் திகதி அறிவித்திருந்தன.
அதனடிப்படையில் தீர்வை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையே முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழிலாளர்களின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நெடுந்தீவு மற்றும் சுழிபுரம் பகுதிகளிலும் கடற்றொழிலாளர்களால் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்.மாதகல் , சேந்தாங்குளம் மற்றும் சுழிபுரம் மீனவர்கள் இன்று கறுப்புகொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது 100 இற்கும் மேற்பட்ட படகுகளில் கரையில் இருந்து போராட்டத்தினை ஆரம்பித்து ஆழ்கடல்வரைசென்று போராட்டதில் ஈடுபட்டதுடன் அங்கு இந்திய இழுவைமடி மீனவர்களுக்கு எதிராக கோசங்களையும் எழுப்பினர்.
இதன்போது நேற்று இரவு இந்திய இழுவைமடி மீனவர்களால் சேதமாக்கப்பட்ட சுழிபுரம் கடற்றொழிலாளர்கள் வலைகளையும் மீனவர்கள் காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சில படுகுகளில் இந்திய இலங்கை கடல் எல்லைவரை சென்று இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட கிராமிய கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
