பொது மக்களால் முற்றுகையிடப்பட்ட பிரதேச செயலகம்! வடமராட்சியில் பதற்றம்(Live)
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு நீதிகோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் மீனவர்கள், எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து,
இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா, வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம், எமது கடல் எமக்கு வேண்டும், கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார், மீனவர்களை கொல்லாதே போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
அப்பகுதியில் பொலிசார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் வீதியை மறிக்காது போராட்டத்தை மேற்கொள்ளுமாறு போராட்டக்காரர்களிடம் கோரிவருகின்றனர்.
இந் நிலையில் மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.சுரேஸ்குமார், வே.பிரசாந்தன், தவிசாளர் ச.அரியகுமார், பிறேமதாஸ், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி ச.திரவியராசா ஆகியோரும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri