யாழில் யூடிபர் செய்த மோசமான செயல்! சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா
வடக்கிலுள்ள இரண்டு யூடிபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(8) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
youtube கலாசாரம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான ONLINE SAFETY என்ற விடயம் தற்போது இல்லை. அதிலும் வடக்கு கிழக்கில் youtube கலாசாரம் வளர்ந்து வருகின்றது.
உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் யூடிபர் ஒருவர் ஒரு பிள்ளை காணொளி எடுக்க வேண்டாம் என கூறும் போது அவரை முறையற்ற விதத்தில் பேசும் விதமான காணொளி வெளியாகியுள்ளது.
இவர் ஒரு தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார பீரங்கி.
மேலும் வடக்கின் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை பிரல்யமாக கொண்டு சென்ற ஒரு யூடிபரின் ஊழல்களும் வெளிவந்துள்ளன.
இவர்கள் தொடர்பான விபரங்களை தருகின்றேன் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
வெளியாகியுள்ள காணொளி
வலையொளி பக்கமொன்றின் யூடிபர் ஒருவர் இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளி பதிவு எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யூடிபர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது வலையொளி பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணத்தினை பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து வருகின்றார்.
அவ்வாறு காணொளிகளை பதிவு செய்யும்போது அந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்குள் அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
மக்கள் மத்தியில் அதிருப்தி
இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணியான எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 41 நிமிடங்கள் முன்

Optical illusion: பந்திற்குள் மறைந்திருக்கும் "5" களில் மறைந்துள்ள "3" ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
