யாழில் நாயை கொடூரமாக கொலை செய்த இருவர் கைது - முதன்மை சந்தேகநபர் தலைமறைவு
எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் இன்று இரவு ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாயை வெட்டிக் கொலை செய்ய பயன்படுத்திய கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மிருக வதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதிவான்
நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் குழுவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நான்கு இளைஞர்கள் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து படுகொலை செய்து தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
