யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (14.10.2026) காலை 9 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், வடக்கு மாகாணப் பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.








நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்! Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam