புதிய நியமனம் தொடர்பில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரின் குற்றச்சாட்டு (video)
யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் மோசமான செயலை மேற்கொண்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் நா.வர்ணகுலவிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு நேற்று (01.02.2023) கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே எங்களது சம்மேளனத்தின் காலம் முடிந்து இரு முறை நியமனத்தை பெற்றுக் கொண்டோம்.
மூன்றாவது முறை எம்மிடம் வந்து சம்மேளன கடிதம் பெற்றுக் கொண்டு திடீரென ஒரு புதிய நியமனம் உருவாக்கப்பட்டுள்ளது என நாங்கள் கேள்வியுற்றோம்.
இந்நிலையில் எங்களது பழைய சம்மேளனத்திடம் வந்து எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை, பழைய சம்மேளனம் இதுவரை கலைக்கப்படவும் இல்லை.
ஆனால் ஒரு புதிய நியமனமொன்று உருவாக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri