யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை அடுத்து மேலும் பல பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ஆராய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக செய்தி மற்றும் புகைப்படங்கள் - தீபன்




























குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
