கோலாகலமாக நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றைய தினம் (03.10.2025) நடைபெற்றுள்ளது.
வெற்றியீட்டியவர்களுக்கான கெளரவிப்பு
இதன்போது யாழ். புனித யுவானியர் தேவாலய முற்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவரும் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாா், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராம், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் தர்சினி நிதர்சன், கெளரவ விருந்தினராக அளவெட்டி நாதஸ்வர கலாநிதி இரத்தினவேல் கேதீஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இந்நிகழ்வின் வரவேற்புரையானது மேலதிக அரசாங்க அதிபர் தகே. சிவகரனால் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவகையில் - பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான கெளரவிப்பும் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
