தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா

By Theepan Oct 24, 2026 08:39 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்டச் செயலகமும் இணைந்து, வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழாவை நடத்தியுள்ளன.

இந்த நிகழ்வு நேற்றைய தினம் (23.10.2026) சிறப்பாக நடைபெற்றிருந்தது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டப் பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வுநிலை அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா | Jaffna Cultural Festival Celebration Tamil Culture

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

மாவட்டச் செயலக நுழைவாயிலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்தில் ஒயிலாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், சுளகு நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரியக் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற அரங்கு நிகழ்வுகளில் காலிங்க நர்த்தனம், பாரம்பரிய கூத்திசைப் பாடல்கள், வீரக் குழுநடனம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேறின.

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா | Jaffna Cultural Festival Celebration Tamil Culture

மூத்த கலைஞர்களுக்கு “யாழ்முத்து” விருதும், இளம் கலைஞர்களுக்கு “இளங்கலைஞர்” விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, யாழ்ப்பாணத்தின் நாட்டார் வழக்காறுகளையும் சமூக அறிவியல் ஆய்வுகளையும் உள்ளடக்கிய “யாழ்ப்பாணம் 05 – நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூல் தொடர்பான ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கம் நிகழ்த்தினார். மேலும், மாவட்ட மட்டக் கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற கலை மன்றங்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கவிஞர் சோ.பத்மநாதன் உள்ளிட்ட கலைத்துறையினரும் கௌரவிக்கப்பட்டனர்.

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா | Jaffna Cultural Festival Celebration Tamil Culture

தமிழர் பாரம்பரியத்தையும் இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் வகையில் தென்னோலை, மூங்கில், பனை ஓலை உள்ளிட்ட இயற்கைப் பொருட்களால் அரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், அரச அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா | Jaffna Cultural Festival Celebration Tamil Culture

GalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US