யாழ்ப்பாண கலாசார நிலையத்தை யாழ். மாநகர சபைக்கு வழங்க தீர்மானம்
இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை யாழ்ப்பாண மாநகர சபைக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (16.02.2023) காலை மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் சொலமன் சிறிலினால் யாழ். கலாசார நிலையத்தை மாநகர சபைக்கு வழங்க வேண்டும் எனும் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

முகத்தில் கரியை பூசி
குறித்த பிரேரணைக்கு சபையில் பிரசன்னமாகி இருந்த அனைத்து உறுப்பினர்களும் சம்மதம் தெரிவிக்க பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஒட்டுமொத்த தமிழர்களும் கரிநாளாக பிரகடனப்படுத்திய நாளில் இந்த கட்டிடத்தை கையளிக்கும் நிகழ்வை நடாத்தி எங்களுடைய முகத்தில் கரியை பூசி உள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் மாநகர சபை உறுப்பினர் வை.கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு இந்த கட்டிடம் கையளிக்கும் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வருக்கு சரியான முறையில் கௌரவம் வழங்கப்படாதது தனக்கும் சபைக்குமான மன வேதனையை ஏற்படுத்தியதாக வை.கிருபாகரன் தெரிவித்துள்ளார் .
இந்திய அரசாங்கம் தெரிவிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கலாசார நிலையம் மாநகர சபையை தவிர்த்து வேறு யாரிடமும் வழங்கப்பட மாட்டாது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் சபைகள் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த கலாச்சார நிலையத்திற்கு "யாழ்ப்பாண பண்பாட்டு நடுவம்" என பெயர்
சூட்டப்பட வேண்டும் எனவும் மாநகர சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 16 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam