வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் மீள ஆரம்பம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நாளை முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள்
ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



