இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை (Photos)
பீற்றர் இளஞ்செழியனை கட்சியிலிருந்து நீக்குவதாக இலங்கை தமிழரசு கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் அணி பொருளாளரும், மத்தியகுழு உறுப்பினருமான பீற்றர் இளஞ்செழியன், தம்மைக் கட்சியிலிருந்து இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் நீக்கியது தவறு என யாழ்.மாவட்ட நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரின் மனுவிற்கு ஆதரவாகச் சட்டத்தரணி கலாநிதி குருபரன் முன்னிலையாகியிருந்தார்.
பிரதி வாதிகளாக இலங்கை தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் கவனத்தில் எடுத்த நீதிபதி சசிதரன் இன்றிலிருந்து 14 நாட்களுக்கு எதிர்வரும் (22/04/2022) வரை பீற்றர் இளஞ்செழியனைக் கட்சியிலிருந்து நீக்கியமைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் 14, நாட்களுக்குள் அவரை கட்சியிலிருந்து நீக்கியமைக்கான விளக்கத்தை யாழ்ப்பாண நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக பீற்றர் இளஞ்செழியன் கருத்து தெரிவிக்கையில்,
தாம் இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுள்கால உறுப்பினராகவும், இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் இணை பொருளாளராகவும், இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும் முல்லைத்தீவு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி நிர்வாக உறுப்பினராகவும் பல வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றினேன்.
இதன்போது எந்த தவறுகளும் கட்சியில் செய்யாதபோது என்னிடம் எந்த ஒரு விளக்கமும் கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கியமை கட்சி உபவிதிக்கு முரணான செயல் என்பதால் நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.









பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
