குற்றச்செயலுடன் தொடர்புடைய செவ்வந்தியுடன் வெளிநாட்டில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி
இலங்கையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் செவ்வந்தி உட்பட ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவில் கம்பஹா மற்றும் நுகேகொடையை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி
இதேவேளை, கைது சசெய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை நாளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களம், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் நேபாள பாதுகாப்புப் படையினரால் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் காத்மாண்டுவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



