யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 2024ஆம் ஆண்டு மாநாடு நேற்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றுள்ளது.
வளர்ந்து வரும் தொழில் முனைவோரை வலுப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களை வளர்த்தல் எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.
இம்மாநாட்டில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா, வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பாலா சுவாமிநாதன், முன்னாள் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி, FITEN அமைப்பின் தலைவர் கௌதம் ராஜன் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
வர்த்தகக் கலந்துரையாடல்கள்
உள்ளூர் உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டில் சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், பல வெற்றி பெற்ற தொழில் வல்லுநர்களின் தொழில் அனுபவ மற்றும் அறிவுப் பகிர்வுகள் என்பவற்றுடன் உள்ளூர் தொழில் முனைவோருக்கும், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் தொழில் முனைவோருக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |