யாழ். மத்திய பேருந்து நிலைய பொது மலசலகூட விவகாரம்.. விரைவில் தீர்வை எட்ட வலியுறுத்து

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples
By Kajinthan May 11, 2026 02:27 PM GMT
Report

மக்களின் அவசிய தேவை கருதி யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை இருதரப்பும் இணைந்து பேசி மக்கள் நலன் சார்ந்து தீர்வைக் காண முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இதனை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இரு தரப்பினருக்கும் இடையே குறித்த விவகாரம் இழுபறியாக நீடித்துவருவதால் நாளாந்தம் பல்லாயிரக் கணக்கில் வரும் மக்களின் தேவை கருதிய அவசிய திட்டமான இந்த மலசலகூட கட்டட தொகுதி இன்னமும் பாவனைக்கு விடமுடியாத நிலையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் யாழ். மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கூறுகையில்,

பல்வேறு தரப்பினரது கோரிக்கையின் அடிப்படையில் கடந்த எமது ஆட்சிக் காலத்தில் இந்த பொதுமலசல கூட கட்டட நிர்மாணத்துக்காக யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் திட்ட முன்மொழிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் அன்று வழங்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் பிரதேச சபையில் விசேட கூட்டம்

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் பிரதேச சபையில் விசேட கூட்டம்

தீர்க்கமான முடிவு.. 

யாழ். மாநகரின் முழுமையான நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த மலசலகூடத் தொகுதியை கடந்த மாதம் குத்தகைக்கு விடுவதற்கான விண்ணப்பத்தை யாழ் மாநகரசபை ஊடகங்கள் வாயிலாக கோரி இருந்தது.

யாழ். மத்திய பேருந்து நிலைய பொது மலசலகூட விவகாரம்.. விரைவில் தீர்வை எட்ட வலியுறுத்து | Jaffna Cesspool Issue Request Made

இந்நிலையில், இ.போ.சவினர் குத்தகை வழங்கலை தன்னிச்சையாக மாநகரசபை கோரியுள்ளதாக கூறியதை அடுத்து இந்த இழுபறி உருவாகியுள்ளது. இதேநேரம் இரு சபைகளும் மக்களுக்கான சேவையை முன்னெடுக்கும் சபைகளாக இருக்கும் நிலையில் இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த விடயத்தில் இழுபறிப்படுவது ஆரோக்கியமானதாக இருக்காதென்றே நாம் எண்ணுகின்றோம்.

கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி யாழ். மாநகரை ஆட்சி செய்த காலப் பகுதியில் யாழ். பேருந்து நிலைய சூழலில் மக்ககுக்கான வாழ்வாதார நோக்குடன் பழங்களை விற்பதற்கான கடைகளை, மாநகரசபை மற்றும் இ.போ.ச ஆகியன வருமான வசூலிபை பகிர்ந்து கொள்ளும் வகையில் இரு தரப்பினரது இணக்கப்பாட்டுடன் வழங்கப்பட்டு இன்றும் அது செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இவ்விடயத்திலும் குறித்த இரு தரப்பினரும் கலந்துரையாடி மக்களின் நலன்களுக்காகவும் குறித்த மலசல கூட தொகுதி அமைக்கப்பட்டதன் நோக்கத்தை கருதியும் சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதுவே ஆரோக்கியமானதும் கூட என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


தமிழகத்திற்கு ஒரு தளபதி! இலங்கை மக்களுக்கு பொய்களின் அதிபதி..

தமிழகத்திற்கு ஒரு தளபதி! இலங்கை மக்களுக்கு பொய்களின் அதிபதி..

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: ஒரே நாளில் ஆயிரம் பேர் கைது

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: ஒரே நாளில் ஆயிரம் பேர் கைது

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US