யாழ் முன்னணி ஆண்கள் பாடசாலைக்கு முன்னால் பாரிய போராட்டம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டமானது இன்று (19.2.2024) பாடசாலை முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டது.
முதல் முறையாக பெண் அதிபர் நியமனம்
இதன்போது, பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 23 மணி நேரம் முன்
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan