யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கை! டக்ளஸ் உறுதி
யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தை புனரமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற் தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மத்திய கல்லூரியில் இன்று (29.03.2023) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை மற்றும் பாடநூல் விநியோக நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பாடசாலையினுடைய அதிபர் நீச்சல் தடாகத்தினை மீள செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்.
அவரது கோரிக்கையை மாணவர்களும் ஏற்றதன் காரணமாக இரு மாதங்களுக்குள் குறித்த
நீச்சல் தடாகத்தினை மீள செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அவர்
மேலும் தெரிவித்தார்.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam