யாழில் பேருந்து - வான் மோதி கோர விபத்து: 9 பேருக்கு நேர்ந்த கதி (Video)
யாழ்ப்பாணம் - கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (26.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் இருந்து வந்த தனியார் பேருந்து, கிளிநொச்சியில் இருந்து வந்த வான் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த அனைவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
