பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
போலியான ஆவணங்கள் மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் செல்ல முயற்சி
வர்த்தக வகுப்பு விமான டிக்கட்டை பயன்படுத்தி பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் கடவுச்சீட்டில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவை போலியானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞனை இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
