தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை! - யாழ். மறைமாவட்ட ஆயர் அரசுக்கு பாராட்டு
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை, அமைச்சர் நாமல் ராஜபக்சவின் நாடாளுமன்ற உரை தொாடர்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
“தமிழ் கைதிகளை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை பாராட்டுவதாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மற்ற தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொத்தத்தில் 81 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். 81 பேரில், பதினாறு பேர் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் விடுதலையும், அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அமைச்சர் நமல் ராஜபக்சவின் அக்கறையும் பாராட்டத்தக்கது,
நாடாளுமன்றத்தில் அமைச்சர் நமலின் உரையும், அரசியல் கைதிகளின் விடுதலையும் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதினாறு கைதிகளின் விடுதலையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்த முயற்சி நிச்சயமாக அமைதி குறித்த நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டுவரும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து்ளளார்.
"இந்த வகையான முயற்சி நீண்ட காலத்திற்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், வடக்குக்கும் தெற்கிற்கும் இடையிலான தவறான புரிதல்களை இல்லாம் செய்வதற்கான ஒரு நல்ல முயற்சியாக நாங்கள் கருதுகிறோம், ”என்று பேராசிரியர் கூறினார்.
இதனிடையே, கைதிகளின் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அமைச்சர் நமல் ராஜபக்ச தெரிவித்த கருத்தினை வரவேற்ற அதேவேளையில், கைதிகளை விடுவித்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏனைய அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்தவும் அவர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
