யாழில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருளுடன் கைது
அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்களை ஹரோயின் போதைப் பொருளுடன் நேற்று (28.12.2022) நீலாவணை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோளாவில் பகுதியைச் சேர்ந்த யாழ் ஆவா குறுப்புடன் இயங்கி வந்த 24 வயதுடைய
ஒருவர் உட்பட மூன்று இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீ வைத்த சம்பவம்
கடந்த 21 ஆம் திகதி அதிகாலை நீதிமன்ற கட்டிடத்திற்கு அடையாளம் தெரியாதோரால் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இதன்போது நீதிமன்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மூலம் நீதின்ற கட்டித்திற்கு முகமூடி அணிந்தவாறு 3 பேர் நீதிமன்ற பகுதிக்குள் உள்நுழைந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணையில் நீலாவணை பகுதில் பதுங்கிருந்த அக்கரைப்பற்று கோளால் பகுதியைச் சேர்ந்த 24, 20, 17 வயதுடைய மூன்று பேரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இதில் கைது செய்யப்பட்ட 24 வயதுடையவருக்கு 9 நீதிமன்ற பிடிவிறாந்து உள்ளதுடன் இவர் யாழ் ஆவா குறூப்புடன் அங்கிருந்து செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவரின் நண்பர்களான 20,17 வயதுடைய அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்தவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுககப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை
அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.