வட்டுக்கோட்டையில் வாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது (VIDEO)
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் உள்ள கோவில் ஒன்றிலிருந்து 11 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது மீட்கப்பட்ட அனைத்து வாள்களும் கோயில் பாவனையில், கோவிலின் உள்ளேயே இருந்துள்ளதாகவும், வாள்கள் கோவில் சடங்கு சம்பிரதாய நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுபவை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோவிலில் சடங்கு செய்பவரின் 22 வயது மகன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri