யாழ் -அராலி பேச்சியம்மாள் ஆலய வேள்வித் திருவிழா
யாழ்ப்பாணம் - அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வேள்வி திருவிழாவின் ஆரம்ப நிகழ்வாக நேற்றையதினம்(27) மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
வேள்வித் திருவிழா
அதனைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.
பின்னர் பேச்சியம்மாள் சிங்க வாகனத்தில் ஏறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
மேலும், ஆலய கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்ததுடன் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றுள்ளனர்.
[C9XUSG