யாழ். நாவாந்துறை பிரதேசத்திற்கு அங்கஜன் இராமநாதன் களவிஜயம்
அனர்த்தமுகாம் அமைச்சின் ஊடாக 13 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நாவாந்துறை பிரதேசத்தில் வெள்ள வாய்க்கால் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலையினை கண்காணிப்பதற்காக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளருமான யாழ் .மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் களவிஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதுவரை காலங்களாக நாவாந்துறை மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினையாக மழைக் காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்கின்ற நிலை காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கான நிரந்தர தீர்வாக வெள்ளவாய்கால் அமைப்பதற்கான முதற்கட்ட அபிவிருத்தி பணிகளை அங்கஜன் இராமநாதன் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த களவிஜயத்தில் யாழ்.மாவட்ட அனர்த்தமுகாம் உதவிப் பணிப்பாளர் சூரியகுமார், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், கிராம சேவகரும் போன்றோர் வருகை தந்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
