யாழில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் சேவைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையின் பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு மருத்துவர்கள் பகலில் கடமையில் உள்ளனர். ஆனால், இரவு வேளைகளில் மருத்துவர்கள் எவரும் கடமையாற்றுவதில்லை.
இரவுவேளைகளில் மருத்துவமனைக்கு அவசர நோயாளர்கள் செல்லும் போது நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவது வழமையாகும்.
வைத்தியர்கள்
இந்நிலையில், நேற்றைய தினம் (19) அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு, நாகர்கோவில் பகுதியிலிருந்து வலிப்பு ஏற்பட்ட சிறுமி ஒருவரை அவரது பெற்றோர் இரவு 8:30 மணியளவில் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையினுடைய நோயாளர் காவு வண்டி இருந்திருக்கவில்லை. அது எங்கே என வினவியபோது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவரும் இல்லாத நிலையில், நோயாளர் காசு வண்டியும் இல்லை, அவசர நோயாளர்களின் நிலை என்ன? என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தும் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ள நிலையில், சுமார் 50 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.
பசில் - நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan