யாழில் பாடசாலை ஆசிரியர் தாக்கப்பட்டமைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு!(Video)
யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் இன்று (23.11.2022) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு
பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றும் தாக்கிய நபர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

ஆசிரியரை தாக்கிய பெற்றோர் கைது செய்யப்படவில்லை என்றால் எதிர்வரும்
வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்றை ஏற்படுத்த உள்ளதாகவும் குறித்த விடயம்
தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டுள்ளனர்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri