யாழில் இருந்து சென்ற வாகனம் விபத்து : சிரேஷ்ட விரிவுரையாளரின் மனைவியும் உயிரிழப்பு
களனிப் பல்கலைக்கழகத்தின் (University of Kelaniya) உளவியல் பிரிவின் தலைவரான, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கயந்த குணேந்திரவும் அவரது சகோதரரும் திடீர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேராசிரியரின் மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த முன்று குழந்தைகள்
கடந்த மார்ச் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்று மூன்று குழந்தைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் விபத்திற்கு உள்ளானது.
நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் அவர்கள் பயணித்த வேன் லொறியின் பின்புறத்தில் மோதியதில் 46 வயதான விரிவுரையாளரும் அவரது சகோதரர் உயிரிழந்தனர்.
அவரது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேனின் ஓட்டுநராக இருந்த கலாநிதி கயந்தாவின் மைத்துனரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்ததோடு, அவரது மனைவியும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முன்று குழந்தைகள் உட்பட அவரது உறவினரும் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri
