யாழில் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்(Photos)
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் விபத்துக்கள் பதிவாகிவருகின்றது. இவ்வாறு விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பலர் படுகாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இன்று தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர் 30 வயது மதிக்கதக்க 5 அடி உயரமும் பொது நிறம் உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காற்சட்டை வெள்ளை ரீசேட் அணிந்திருந்ததுடன் உலப்பனை, வட்டவளை- அட்டன் சென்ற பயணசீட்டு உள்ளதுடன் இவர் கண்டியைச் சேர்ந்தவர் என்றும் அறியமுடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கையை காட்டி புகையிரத தண்டவாளம் முன் புகையிரதம் வரும்போது நின்றுள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மரண விசாரணையை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதுடன் உரியவர்கள் சடலத்தை இனங்காணுமாறு மரணவிசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் கேட்டுகொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது நடந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொட்டகலை
இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் நேற்று (05.10.2022) நடந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் பி. ஜகத் ஜெயானந்த பண்டார (வயது 48) இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: திருமால்




குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
