யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை விபத்தில் பலி
கிளிநொச்சி ஏ9 வீதி - உமையாள்புரம் பகுதியில் நேற்று மாலை ( 29.05.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்.வடமராட்சி ஆழியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலைரூபன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் விஸ்வமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக ஆழியவளை நோக்கிச்சென்று கொண்டிருந்த போது பளை பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் ரக வாகனம் உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது முன்னாள் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கலைரூபன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். விபத்தில் பலியானவரின் மகன் இன்று (29.05.2023) நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவனாவார்.
இந்த விபத்தினை தொடர்ந்து ரிப்பர் சாரதி கிளிநொச்சி நோக்கி பயணித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ரிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
