யாழில் விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் பலி..! கொட்டடியில் சம்பவம்
யாழ்.கொட்டடி லைட் அண்ட் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடி லைடன் சந்தி பகுதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த உந்துருளி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் யாழ்ப்பாண பிரதேசத்தை 22 வயதுடைய றொபிக்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri