வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த 26 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதுடன்,இதன்போது குறித்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதனைத்தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri