யாழ். பல்கலைகழக மாணவியின் மரணம் - சோகமயமான கிராமம்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு வாகனம் நேற்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ பீடத்தில் முதலாமாண்டில் கல்வி பயின்ற 23 வயதான ராமகிருஸ்ணன் சயகரி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் நாவலப்பிட்டியிலுள்ள அவரிது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

பல கனவுகளுடன் பல்கலைக்கழகத்திற்கு சென்ற மாணவியின் மரணம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விடுமுறைக்காக குடும்பத்தினரை பார்ப்பதற்காக சென்ற வேளையில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெற்றோர், விசேட தேவையுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
