இந்தோ ஆசிய நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்(Photos)
இந்தோ ஆசிய நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் (10.12.2022) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்திற்கும் விஜயம் செய்துள்ளனர்.
பெண்களின் அபிவிருத்திக்கான உதவிகள்
அங்கு நெசவுத் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டத்துடன்
எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள
வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரத்தினம் கருத்து தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து ஆசிய குரூப் என்ற பெயரில் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சிறுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தொழிற் திணைக்களத்தின் நெசவுசாலைக்கும் அவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
உற்பத்திகளை விரும்பிக் கொள்வனவு
இது தொடர்பில் பெண்களை வலுவூட்டுவது தொடர்பில் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர். மனித வலுவினை பயன்படுத்தி பெண்களால் செய்யப்படுகின்ற ஆடைகள், புடவைகள் மற்றும் ஆடவர்களுக்கான உடைகள் என்பவற்றை அவர்கள் பார்வையிட்டு தமது பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.
அத்துடன் உற்பத்திகளை அவர்கள் விரும்பிக் கொள்வனவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பெண்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியை வாழ்வாதார திட்டத்துக்காக பயன்படுத்துகின்ற செயல் திட்டமாக இந்த நெசவு பயிற்சி நிலையம் காணப்படுகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
