மோடி கட்சியுடன் இணைந்த இந்திய கிரிக்கட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னிலை வீரரான ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) பாரதிய ஜனதாக்கட்சியில் (BJP) இணைந்துள்ளார்.
இதனையடுத்து, ரவீந்திர ஜடேஜாவின் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ரிவாபா ஜடேஜா குஜராத்தில் பாரதிய ஜனதாக்கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் நிலையிலேயே ஜடேஜா கட்சியில் இணைந்துள்ளார்.
ஓய்வு
ரவீந்திர ஜடேஜா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட் அணியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் சிறந்து விளங்கினார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிகாவை வீழ்த்தி இந்திய அணி செம்பியன் பட்டத்தை வென்றதன் பின்னர், ஜடேஜா தாம், இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |