இந்திய மாநிலம் ஒன்றில் நிதி நெருக்கடி : இடைநிறுத்தப்பட்ட அரச பணியாளர்களின் சம்பளம்
இந்திய காங்கிரஸின் ஆளுகைக்கு உட்பட்டுள்ள ஹிமாச்சல் பிரதேசத்தில் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அங்கு அரச பணியாளர்களுக்கு நேற்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கைகள்
வழமையாக ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று ஹிமாச்சல் பிரதேஸில் அரச பணியாளர்களுக்கான சம்பளம்; வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனினும் இந்த மாதத்தில் இதுவரை சம்பளத்துக்கான பணம் வங்கிகளுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.
இதன் காரணமாக அங்கு அரச பணியாளர்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் நிலைமை விரைவில் சீராகும் என்று மாநிலத்தின் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் காங்கிரஸின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலம் என்பதால், மத்திய பாரதிய ஜனதா அரசாங்கத்தின்; எதிர் செயற்பாடுகள் அங்கு தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |