பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை போக்கவுள்ள தங்கச்சுரங்கம்
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, நிதியைக் கொண்டு வரும் முக்கிய வளம் ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கச்சுரங்கமே இந்த வளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் நட்பு
இந்தநிலையில் இந்த தங்கச்சுரங்கத்தைக் கொண்டு, தமது பொருளாதாரத்தை சீர்படுத்திக்கொள்ளமுடியும் என்று பாகிஸ்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறது
எனினும் அந்த தங்கச்சுரங்கத்தின் அகழ்வுப்பணிகளுக்காக பெருமளவு நிதியை செலவிட பாகிஸ்தானிடம் நிதி வசதியில்லை.
இதனையடுத்து தமது அரசியல் நட்பு நாடான சவூதி அரேபியாவின் உதவியை அந்த நாடு நாடியுள்ளது
இதன்படி சவூதிக்கு குறித்த சுரங்கத்தின் 15 வீதத்தை விற்பனை செய்வதன் மூலம் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வது தொடர்பில் பாகிஸ்தான் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |